ad b

வேர்டில் எப்2 கீ பயன்கள் பற்றி தெரியுமா
















மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் 
வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.

1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும். 


2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 


3. Text குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸினைக் காட்டும். 


4. அடுத்து Categories கீழ்விரி பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Field Namesஎன்பதில் NumPages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து டயலாக் பாக்ஸை மூடி, பீல்டை இணைக்க ஓகே, கிளிக் செய்திடவும். இனி, மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்டப்படும்.


வேர்டில் எப்2 கீ: 
டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல.

டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த: வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி அளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.


1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும். 


2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும். 


3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும். 


4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது. தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.