ad b

வைரஸ் பாதித்த கணினியை இயக்குவது எப்படி?

விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று, மால்வேர் அல்லது வைரஸினால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டால், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவதில் எந்த மாற்றமும், தீர்வும் கிடைக்காது. 



பெர்சனல் கம்ப்யூட்டரை சோதனை செய்வது எப்படி?

நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். 


பென்டிரைவில் தரவு பரிமாற்ற நேரத்தை மாற்றுவது எப்படி?

பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். 


கணினியில் பல பைல்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

விண்டோஸ் இயக்கத்தில், பல ஆண்டுகள் இயங்கி, அனுபவம் பெற்றவர்கள் கூட, சில செயல்பாடுகளுக்கான வழிகளை மறந்து விடுகிறார்கள் அல்லது அவற்றைத் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பைல்களைக் கையாள்வதில், நாம் சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களத் தேர்ந்தெடுத்து, காப்பி, நகர்த்த அல்லது நீக்க வேண்டியுள்ளது. 

இணைய தள இணைப்புப் பெயர்கள்

இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும். 






இந்தியாவை ஆட்டி படைக்கும் பேஸ்புக்

இந்தியாவைப் பொறுத்தவரை பேஸ்புக் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், பேஸ்புக் தளத்தைப் பயன் படுத்துகின்றனர். 


எக்ஸெல்லில் ஸ்குரோலிங் நுட்பம்

வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். 



பிரவுசரில் தானியங்கி தேடு பொறியை நிறுத்த வேண்டுமா

குரோம் பிரவுசரில் திடீரென பல சர்ச் இஞ்சின்களின் இயக்கம் தானே தொடங்குவதாகவும், இவை எப்படி கம்ப்யூட்டருக்குள் வந்தன என்றே தெரியவில்லை என்றும்


குரோம் பிரவுசர் பயனுள்ள தகவல்கள்

கூகுள் நிறுவனம் தந்துள்ள குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த பிரவுசருக்கு மாறும் பயனாளர்கள், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுக்கு மாற்றாக இதனை நாடுகின்றனர். கம்ப்யூட்டர் மலர் இதழுக்கு வரும் வாசகர்களின் கடிதங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இங்கு, குரோம் பிரவுசரைப் பயன்படுத்துவதில் உதவக்கூடிய சில குறிப்புகள் தரப்படுகின்றன.


விண்டோஸ் 7 ஹாட் கீகள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. 




கணினியில் ராம் பற்றி தெரிந்து கொள்ளலாம்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

அதிவேக இணையத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி?

நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இணையத்தை பயன்படுத்த நினைப்போம். அதிவேக இணையம் என்ற விளம்பரத்தில் மயங்கி, புதிய இணைப்பு ஒன்று வாங்கி விடுவோம். ஆனால் வாங்கிய பிறகு நடப்பது வேறு. இணையத்தில் ஒரு வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டு, சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம் என்று தோன்றும். அவ்வளவு மெதுவாக இணையம் வேலை செய்யும்.

Anti Virus இல்லாமல் பென் டிரைவ்வில் உள்ள வைரஸ் அழிப்பது எப்படி?

 



சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.


விண்டோஸ் 8 குறுக்கு வழி கட்டளைகள்

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம்.

பேஸ்புக் நாம் அறியாத தகவல்கள்

தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.





மெமரி கார்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

மெமரி கார்ட்இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்கஇப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது 


கணினியில் அழிய மறுக்கும் கோப்புகளை முற்றிலும் அழிப்பது எப்படி?

தேவையில்லாத கோப்புகள்
இருந்துக்கொண்டு நம்மை இம்சிக்கும்.
அவற்றை அழிக்க முற்பட்டாலும்
அவை அழிச்சாட்டியம் செய்து அழிய
மறுக்கும். அவ்வாறு அழிக்க கோப்பைத்
தேர்ந்தெடுத்து delete கொடுத்தாலும்
ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி அழிக்க
முடியாது எனக்கூறும். 

இணைய இணைப்பு சிக்கல்கள்

இணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். 

எக்ஸெல்லில் காலியான செல்களை அறிவது எப்படி?

காலியான செல்களை அறிய: ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்






கணினி மானிட்டரை சுத்தம் செய்வது எப்படி?

பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். 



கணினி டாஸ்க்பாரும் இம்மாம் பெரிய டூல் பாரும்

டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். 



தெரிந்துகொள்ள வேண்டிய கணினி நுட்பங்கள்









1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.


கணினி நினைவகத்தை பாதுகாப்பது எப்படி?

கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி, அப்படி ரீஸ்டார்ட் செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.


இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.


Check Disk செய்யும் முறை:


1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.


2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் "Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.


3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.


4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.


உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.


5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.


6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.


Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.