ad b

இந்தியாவை ஆட்டி படைக்கும் பேஸ்புக்

இந்தியாவைப் பொறுத்தவரை பேஸ்புக் வளர்ச்சி மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக வேகத்துடனே காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், இதில் செயல்படும் பயனாளர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சமாகும். இதில் 7 கோடியே 30 லட்சம் பேர், தங்கள் மொபைல் சாதனங் களில், பேஸ்புக் தளத்தைப் பயன் படுத்துகின்றனர். 



இதனாலேயே, தன் மொபைல் அப்ளிகேஷன்களுக்கு, இந்தியாவை ஒரு சோதனைத் தளமாக பேஸ்புக் கொண் டுள்ளது. 2008 ஆம் ஆண்டு வாக்கில்தான், இந்தியாவில் பேஸ்புக் பயன்பாடு தொடங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயனாளர் எண்ணிக்கை 10 கோடியை தற்போது நெருங்கிக் கொண்டி ருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உண்மையிலேயே பேஸ்புக் தான் மாஸ் மீடியாவாக இயங்குகிறது. அதனால் தான், ஐ.சி.ஐ.சி.ஐ., கோகோ கோலா இந்தியா, ஏர்டெல், நெஸ்லே மற்றும் காட்பரி இந்தியா போன்ற நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்திற்கு பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.

26 கோடியே 30 லட்சம் இணைய பயனாளர்களில், 9 கோடியே 30 லட்சம் பேர் பேஸ்புக் தளத்தில் உள்ளனர் என்பது, இதற்கு நல்லதொரு பலம் தான். ஆனால், தற்போது பேஸ்புக் எந்த புதிய முயற்சியும் எடுக்காததால், பயனாளர்களிடம் சற்று சலிப்பு ஏற்பட்டுள் ளதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, தொடர்ந்து தன் பயனாளர்களைத் தக்க வைத்து, அவர்களின் எண்ணிக் கையைப் பெருக்க வேண்டும் என்றால், பேஸ்புக் புதியதாக ஏதாவது செய்திட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.