ad b

பேஸ்புக் நாம் அறியாத தகவல்கள்

தன் 23 ஆவது வயதில் கோடீஸ் வரராக உயர்ந்த இளைஞர் என ஸக்கர்பெர்க்கினை அமெரிக்கா முதல் இடம் கொடுத்து பாராட்டியது. வரும் மே மாதம் தன் 30 ஆவது பிறந்த நாளை இவர் கொண்டாட இருக்கிறார். ஸக்கர்பெர்க் வளர்க்கும் பீஸ்ட் (Beast) என்னும் நாய்க்கு பேஸ்புக்கில் ஒரு தளம் உள்ளது. இதனை17 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.






ஸக்கர்பெர்க், பேஸ்புக்கின் போட்டி தளமான ட்விட்டர் தளத்தில் தனக்கென ஒரு பக்கக் கணக்கு வைத்துள்ளார். இதற்கு 3 லட்சம் விசிறிகள் உள்ளனர். ஆனால், 2012 ஜனவரிக்குப் பிறகு, இதில் புதியதாக எதுவும் எழுதப்படவில்லை.
6,900 கோடி டாலர் சந்தை மதிப்புள்ள நிறுவனமாக உயர்வதற்கு, டாட்டா கன்சல்டன்ஸி (டி.சி.எஸ்) நிறுவனத் திற்கு 46 ஆண்டுகள் ஆனது. ரிலை யன்ஸ் 4,300 கோடி டாலர் மதிப்பினைப் பெற 43 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆனால், பேஸ்புக், பத்தே ஆண்டுகளில் 16,100 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
தன் பயனாளர்களில், 60 லட்சம் பேர்களின் தனிப்பட்ட தகவல்கள், தவறுதலாக ஒரு நிறுவனத்திற்குச் சென்றது என பேஸ்புக் அறிவித்தது. இது தன் சாப்ட்வேர் அப்ளிகேஷனில் இருந்த தவறினால் ஏற்பட்டது என ஒப்புக் கொண்ட பேஸ்புக், அவர்கள் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்ட தாகவும், இவர்களின் நிதி நிலை குறித்த தகவல்கள் எதுவும் திருடு போகவில்லை எனவும் தெரிவித்தது. எவ்வளவு திறமையான சாப்ட்வேர் வல்லுநர் களைக் கொண்ட நிறுவனமாக இருந்தாலும், 100 சதவிதம் பிழை இல்லாத அப்ளிக்கேஷன் களை அமைக்க இயலாது என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.