ad b

வேர்டில் தலைப்புகளைத் தானாக அமைக்க

தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள்,
அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் "Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் "Table1, Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.



1.டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். கேப்ஷன் டயலாக் பாக்ஸைக் கொண்டு வாருங்கள். இதற்கு, உங்கள் வேர்ட் தொகுப்பு வேர்ட் 2007க்கு முந்தையதாக இருந்தால், Insert அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Reference> Caption எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Caption என்ற சிறிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் தர விரும்பும் தலைப்பு மற்றும் இந்த தலைப்பு எதற்காக என்பதை டேபிள், படம் மற்றும் வேறு ஆப்ஜெக்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
2. வேர்ட் 2007 ஆக இருந்தால், ரிப்பனில் References டேப் தேர்ந்தெடுத்து, பின்னர் Captions குரூப்பில் Insert Caption என்பதில் கிளிக் செய்திடவும். 
3. அடுத்து Auto Caption பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Auto Caption டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் ஒரு ஆப்ஜெக்ட் பாக்ஸ் கிடைக்கும். எந்தவிதமான ஆப்ஜெக்ட் என்பதனை இதில் தேர்ந்தெடுத்து டிக் மார்க் அமைக்கவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைக்கும் டேபிள்களுக்கான தலைப்பு அமைக்க விரும்பினால், Microsoft Word Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Use Label என்ற கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, எந்த சொல் டேபிள் அல்லது வேறு ஆப்ஜெக்ட் மேலாகத் தலைப்பாக வர வேண்டுமோ, அந்த சொல்லை டைப் செய்திடவும். இதனை அடுத்து Position என்ற கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, இந்த தலைப்பு எங்கு வர வேண்டுமோ, அந்த இடத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இவை எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எண்களைக் கொண்டு மேற்கோள் குறிகள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type) மாற்ற வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. இந்த மேற்கோள் அடையாளக் குறிகள் அப்படியே உங்களுக்குத் தேவை என்றால் அந்த அடையாளங்களை கீ போர்டில் வேறு ஒரு வழி மூலம் ஏற்படுத்தலாம்.
ஆல்ட் அழுத்தியவாறு 0147 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். 
ஆல்ட் அழுத்தியவாறு 0148 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், முடியும் நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். 
ஆல்ட் அழுத்தியவாறு 0145என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். 
ஆல்ட் அழுத்தியவாறு 0146 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடிவு நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்களை நம் லாக் கீயினை அழுத்திப் பின் அதன் கீழாக உள்ள கீ போர்டு மூலம் டைப் செய்திட வேண்டும்.