ad b

WIFI தொழில் நுட்பம் பற்றி அறிய வேண்டுமா?

வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.