ad b

கூகுளின் தானியங்கி கார் அறிமுகம்

கடந்த நான்கு ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் டிரைவரில்லாமல் இயங்கும் காரை தொழில்நுட்பத்துடன் மாற்றங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்டீயரிங் வீல், பிரேக், ஆக்சிலேட்டர் பெடல்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட தனது முதல் புரோட்டோடைப் தானியங்கி காரை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு இருக்கை வசதி கொண்ட வாகனம் சற்று அல்ட்ராகாம்பேக்ட் ஃபியட் 500 அல்லது மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்மார்ட் கார் போன்று தோன்றும். இந்த கார் ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மனிதனின் தலையீடு இல்லாமல் ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷனில் ஒரு இலக்கை தேர்ந்தெடுத்து ஓட்டும். கூகுளின் இந்த முதல் புரொட்டோடைப் நிலையிலிருக்கும் தானியங்கி காரை தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த கூகுள் திட்டமிட்டிருக்கிறது. இந்த காரில் ஸ்டீயரிங் வீல், பிரேக், ஆக்சிலேட்டர் போன்ற எதுவும் இல்லை.


ஸ்டார்ட் பட்டனை அழுத்தி விட்டால் கார் தானாக செல்லும். அவசர காலத்துக்காக எமர்ஜென்ஸி பட்டன் அழுத்தினால் கார் உடனே நின்றுவிடும். தற்போதைய புரொட்டோடைப் கார் மணிக்கு 40 கிமீ வேகம் செல்லும். ஆனால், தயாரிப்பு நிலை மாடல் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் நெடுஞ்சாலைகளில் இல்லாமல் நகர்ப்புற மற்றும் புறநகர் அமைப்புகளில் சோதனை செய்ய நோக்கமாக கொண்டுள்ளது.
அனைத்து திசைகளிலும் 2 கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிலான தூரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும், அதன் நகர்வுகளையும் கண்டுணர்ந்து இந்த கார் செல்லும். இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த புரோட்டோடைப் காரில் பயனிகளின் உடமைகளுக்கான இடம், ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் மற்றும் வழிகாட்டும் திரை போன்ற வசதிகள் அடிப்படையாக கொண்டிருக்கும். கார்களின் முன் பக்கம் சுமார் 2 அடி (61 செ.மீ.) foam கொண்டிருக்கும் மற்றும் கார்களின் பாதுகாப்பிற்காக விண்ட்ஷீல்ட்டில் கண்ணாடிக்கு பதிலாக பிளாஸ்டிக் செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தானியங்கி கார் போன்று 100 புரோட்டோடைப் தானியங்கி கார்களை தயாரித்து சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக டைடன் தொழில்நுட்ப இணை நிறுவனர் செர்ஜி பிரின், கூறியுள்ளார். அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தபின், அடுத்து சில ஆண்டுகளில் இந்த கார்களை சாதாரண சாலைகளில் இயக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.