ad b

வலை உலாவி கிராஷ் ஆவதற்கான காரணம்

வாசகர்களிடம் இருந்து, பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள் அடிக்கடி கிராஷ் ஆவதாகவும், அவற்றைச் சரி செய்திட 
முடியாமல், அப்படியே தொடர்வதாகவும், இந்த பிரச்னைக்குக் காரணம் மற்றும் தீர்வு என்ன என்றும் கேட்டு கடிதங்களும் அழைப்புகளும் வருகின்றன. பயர்பாக்ஸ் பிரவுசர் முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றை, பயர்பாக்ஸ் பிரவுசரை சேப் மோடில் இயக்கி ரீசெட் இயக்கி சரி செய்திடலாம். ஆனால், பல நேரங்களில் இவையும் தீர்வாகச் செயல்படாது. 
இணையத்தை நமக்கு வழிகாட்டும் பிரவுசர்கள் முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்கள், பலவகை இயக்க முறைமைகள் கொண்ட ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். இவை நம் சிஸ்டத்தில் உள்ள பல பிற சாப்ட்வேர் தொகுப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றன. எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், தீம் வழங்கும் சிறிய புரோகிராம்கள், ப்ளக் இன், பாதுகாப்பு கவசமாய் இயங்கும் புரோகிராம்கள், கிராபிக்ஸ் ட்ரைவர்கள் மற்றும் பலவற்றைக் கூறலாம். 

1.
சேப் மோட்: பயர்பாக்ஸ் பிரவுசர் தனக்கென ஒரு சேப் மோட் இயக்கத்தினைக் கொண்டுள்ளது. இதில் இயங்கினால், ஆட் ஆன் தொகுப்புகள் இயங்காது. இதனை இயக்க, பயர்பாக்ஸ் மெனுவினைக் கிளிக் செய்திடவும். பின்னர், ஹெல்ப் சென்று Restart with Addons Disabled என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இன்னொரு வழியும் உள்ளது. பயர்பாக்ஸ் இயங்கத் தொடங்குகையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டிருந்தால், அது தானாக, சேப் மோட் வகையில் இயங்கத் தொடங்கும். 

பயர்பாக்ஸ் அடிக்கடி கிராஷ் ஆனால், மேலே காட்டப்பட்டிருப்பது போல சேப் மோட் வகையில் இயக்கவும். இந்த வகையில் சரியாக இயங்கினால், பிரச்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இயக்கும் ஆட் ஆன் புரோகிராம்கள் ஒன்றில் உள்ளது. அடுத்து, வழக்கம் போல பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பாக இயக்கிப் பார்த்து, எந்த ஆட் ஆன் தொகுப்பு பிரச்னையை அளிக்கிறது என்பதனைக் கண்டறியவும். 

2.
பயர்பாக்ஸ் ரீசெட்: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துகையில் நீங்கள் தரும் உங்களைப் பற்றிய தனித் தகவல்கள் உங்களுடைய ணீணூணிஞூடிடூஞு போல்டரில், பதிந்து வைக்கப்படுகின்றன. இந்த போல்டரும் கூட, பயர்பாக்ஸ் முடங்கிப் போக ஒரு காரணமாக இருக்கலாம். இதில் என்ன விதமான பிரச்னை எனக் கண்டறிய நீங்கள் உங்கள் நேரத்தினை வீணாக்க வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் ரீசெட் செய்யப்பட்டால், புதிய profile folder உருவாக்கப்படும். இந்த போல்டருக்கு நீங்கள் அமைத்த bookmarks, browser history, saved passwords, cookies மற்றும் autofill information என அனைத்தும் மாற்றிக் கொண்டு செல்லப்படும்.
நம்முடைய எக்ஸ்டன்ஷன், தீம், சர்ச் இஞ்சின் செட்டிங் மற்றும் குறிப்பிட்ட இணைய தள குறிப்புகள் நீக்கப்படும். பிரவுசர் கிராஷ் ஆவதற்கு எக்ஸ்டன்ஷன் மற்றும் தீம்ஸ் பெரும்பாலும் காரணமாக இருக்க முடியும் என்பதால், ரீசெட் செய்து, அதனால் profile folder புதியதாக உருவாக்கப்படுவதால், பிரவுசர் இதன் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றப்படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரை அதன் மாறாநிலைக்கு ரீசெட் செய்திட, பயர்பாக்ஸ் மெனுவினைத் திறக்கவும். பின்னர் ஹெல்ப் செல்லவும். அங்கு Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Reset Firefox பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது புதிய profile folder உருவாக்கப்பட்டு, உங்களுடைய பழைய தகவல்கள் அதில் பதியப்படும். இந்த வழிமுறை, உங்கள் பயர்பாக்ஸ் கிராஷ் ஆவதைத் தடுக்கும். 

அடுத்து நீங்கள் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில், ஒவ்வொன்றிற்குப் பின்னும், பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, கிராஷ் ஆகிறதா எனக் கவனிக்கலாம். கிராஷ் ஏற்படுத்தும் ஆட் ஆன் புரோகிராமினை மட்டும் மட்டும் நீக்கிவிடலாம். 

3.
மால்வேர் சோதனை: வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள், எப்படி மற்ற புரோகிராம்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்கிறதோ, அதே போல, பிரவுசரின் இயக்கத்தினையும் முடக்கலாம். எனவே, பிரவுசர் கிராஷ் ஆனால், மால்வேர் புரோகிராம் எதுவும் நுழைந்து, கம்ப்யூட்டரில் உள்ளதா எனச் சோதனை செய்து, அதனை நீக்கவும். ஏற்கனவே உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இயங்கியும், புதிய மால்வேர் உள்ளே நுழைந்துவிட்டதால், புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதனை செய்திடலாம்.

4.
அனைத்தையும் அப்டேட் செய்திடுக: பயர்பாக்ஸ் பிரவுசர் அடிக்கடி கிராஷ் ஆனால், மொஸில்லா, சிலவற்றைக் கட்டாயம் அப்டேட் செய்திடச் சொல்லி அறிவுறுத்துகிறது. அப்டேட் செய்யப்பட வேண்டியவை:

*
பயர்பாக்ஸ் மெனு கிளிக் செய்து, ஹெல்ப் செல்லவும். அதில் About Firefox தேர்ந்தெடுத்து, அப்போது கிடைக்கும் அப்டேட் வசதிகளைப் பயன்படுத்தவும்.

*
அடுத்து https://www.mozilla.org/enUS/plugincheck என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். உங்களுடைய பிரவுசரில், பழைய ப்ளக் இன் புரோகிராம்கள் இருந்தால், இந்த இணைய தளம் ஸ்கேன் செய்து கண்டறியும். அவை காட்டும் லிங்க் மீது கிளிக் செய்து, பழைய ப்ளக் இன் புரோகிராம் களுக்கான அப்டேட் இன்ஸ்டால் செய்திடவும். 

5.
எக்ஸ்டன்ஷன் மற்றும் தீம்ஸ்: பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, Addons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Extensions என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கியர் மெனு கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Check for Updates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஏதேனும் ஆட் ஆன் புரோகிராம் அப்டேட் செய்ய வேண்டியது இருந்தால், அப்டேட் செய்திடவும்.

இதே போல மற்றவற்றையும் அப்டேட் செய்திட வேண்டும். பிரவுசர் மட்டும் புதியதாக இன்ஸ்டால் செய்வதில் பிரச்னை ஏற்படலாம். விண்டோஸ் பேட்ச் பைல், சிஸ்டம் ஆகியவற்றையும் அப்டேட் செய்திட வேண்டும். கூடுதலாக, கிராபிக்ஸ் ட்ரைவர் அப்டேட் தேவையா எனக் கண்டறிந்து, அதனையும் மேற்கொள்ளுதல் நல்லது. பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், இன்டர்நெட் செக்யூரிட்டி புரோகிராம் போன்றவற்றையும் அப்டேட் செய்வது, கிராஷ் ஆவதைத் தடுக்கும். 
மேலும் கிராஷ் ஆவது தொடர்ந்தால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ராம் நினைவத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனக் கண்டறிந்து அதனை நீக்கவும்.