ad b

டூயல் சிம் மொபைல் வாங்கும் முன் யோசிக்க வேண்டியவை

இந்திய சந்தைகளில் தற்போது விற்பனையாகும் 65 சதவீத செல்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் கூடியதாகும். முதலில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சைனா மொபைல்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் இந்த டூயல் சிம் மொபைலை விரும்பி வாங்கி வந்ததால், பிரபல நிறுவனங்களும் தங்களின் செல்போன்களில் டூயல்சிம் பயன்படுத்தும் முறையை கொண்டுவந்தன. இதனால் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளையும் மக்கள் வாங்க தொடங்கினார்கள். ஆனால் இந்த வகை செல்போன்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது.


இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. டூயல் சிம் கார்டு மொபைல்களில், இரண்டு சிம்கார்டுகளும் இயங்கவேண்டிய நிலை இருப்பதால், பேட்டரி அதிகம் வீணாகிறது. இதனால் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்த முடியாது. இரண்டு சிம்கார்டுகளும் ஒரே நேரத்தில் இயங்குவதால் புராசசரின் வேகம் குறைகிறது. இதனால் செல்போன் ஹேங் ஆகும், பல சமயங்களில் செல்போன் அப்படியே அணைந்துவிடும். இதுபோன்று ஒவ்வொரு முறை நடக்கும் போது புராசசரின் திறன் கொஞ்சம் கொஞ்சமாக பதிப்படைகிறது. இறுதியில் நிறுவனங்கள் வழங்கு வாரண்டி காலமான ஒருவருடத்திற்கு பிறகு இந்த பிரச்னைகள் வெளிவருகிறது.
ஹேங்கிங் பிரச்னை சாதாரண செல்போன்களை காட்டிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் தான் அதிகம் ஏற்படுகிறது. காரணம் ஆன்டிராய்டு போன்களில், ஒரு அப்ளிகேஷனில் இருந்து வெளியேறினால் கூட அது திரைக்கு பின்னால் தொடர்ந்து செயல்பட்டில் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் போது ஓரிரு ஆண்டுகளில் செல்போன் முற்றிலுமாக செயலிழக்கிறது. இதனால் தான் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை டுயல் சிம் செல்போன்களை தயாரிக்காமல் உள்ளது. எனவே டுயல் சிம் செல்போன்களை வாங்கும் முன்னர் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிப்பது சிறந்தது.