வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன்
இணைந்த சில ஷார்ட் கட் கீகள்
Alt O, B: தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில்
அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த
கீகளைப் பயன்படுத்தலாம்.
Alt O, E: ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத் தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய
எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.
Alt O, C: காலம், செக்ஷன் என்றழைக்கப்படுகிற
பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில் அழுத்தலாம். column format
என்ற
டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Alt O, D: ஆவணத்தில் பத்தி ஒன்றைத்
தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த
கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும் டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய
விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள்
கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக் கப்படும் வகையில் பத்தியின் முதல் எழுத்து
மாற்றப்படும்.