ad b

விண்டோஸ் 8 சில அடிப்படை சாட்கட் கீகள்

விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:

தேடல்:
Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற. 
Win + . (முற்றுப் புள்ளி): அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.
சார்ம்ஸ் மெனு:
Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.
ஸ்விட்ச் மெனு:
Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.
பேனல்கள்:
Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.
Win + H ஷேர் பேனல் (Share panel) திறக்க.
Win + K புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.
அப்ளிகேஷன் பார்:
Win + Z அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.
ஸ்கிரீன் ஷாட்:
Win + Print Scrn – & இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்ட ரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.
இன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட்டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.

S