ad b

எக்ஸெல்லில் செல்லுக்குள் எண்களை சுருக்குவது எப்படி ?

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த 
விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

படுக்கை வரிசை இணைக்க: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும். 

ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன செய்கிறோம்? இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மேலே கூறியபடி வரிசை ஒன்றை இணைத்த பின்னர், F4 பட்டனை அழுத்தினால், அடுத்தடுத்து வரிசைகள் இணைக்கப்படும். 

இன்னொரு வழி இதைக் காட்டிலும் எளிய வழியாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஐந்து வரிசைகள் இணைக்கப்பட வேண்டும் என விரும்பினால், அந்த வரிசை சென்று, தொடர்ச்சியாக ஏற்கனவே இருக்கும் ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, இன்ஸெர்ட் (Insert)மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் தேர்ந்தெடுத்த முதல் வரிசைக்கு மேலாக, எக்ஸெல் ஐந்து வரிசைகளை இணைத்திருக்கும். இது சற்று வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம்.

செல்லுக்குள் சுருங்கும் எண்கள்: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா? இந்த வேலையை யார் பார்ப்பார்கள்? எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா? தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit”என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.
எக்ஸெல்லில் செல்லுக்குள் எண்களை சுருக்குவது எப்படி