ad b

மல்டி கீ போர்ட் பற்றி தெரிந்துகொள்வோம்












இன்றைய டிஜிட்டல் உலகில், பலவகையான கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதன்ங்கள் இயங்கி வருகின்றன. கம்ப்யூட்டர்களில் 
வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதனைக் கொண்டிருக்கிறோம். அதே போல டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன்களும் இயங்கி வருகின்றன. மாறுபட்ட இயக்கமும் வடிவமைப்பும் கொண்ட இந்த சாதனங்களில் நாம் வெவ்வேறு கீ போர்ட்களையே இணைத்துப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வயர் இணைப்பு இன்றி செயல்படும், புளுடூத் கீ போர்டாக இருந்தாலும், மாறுபட்டவற்றையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், மவுஸ் மற்றும் கீ போர்ட் வடிவமைப்பதில் உலகில் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் லாஜிடெக், அண்மையில் K480 என்ற பெயரில் புதிய கீ போர்ட் ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இது புளுடூத் தொழில் நுட்பத்தில், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் கீ போர்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கீ போர்டில் உள்ள டயல் ஒன்றைச் சுழற்றுவதன் மூலம், விண்டோஸ், மேக் மற்றும் குரோம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்கான கீ போர்டாகப் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஸ்லாட் ஒன்றில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களை வைத்துப் பயன்படுத்தலாம். அவற்றின் தடிமன் 10.5 மிமீ அல்லது குறைவாக இருக்க வேண்டும். இதன் எடை 820 கிராம். 

பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றுடன், வை பி இணைப்பில் பயன்படுத்துகையில், கீ போர்டின் ஸ்லாட்டில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போனில் ஒர் எஸ்.எம்.எஸ். டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றால், அப்படியே, டயலைச் சற்று மாற்றிச் சுழற்றி பயன்படுத்தலாம். 

எந்த டிஜிட்டல் சாதனம் என்றாலும், டைப் செய்திட வேண்டிய அவசியம் சிறிதளவாவது உள்ளது. இந்த வகையில், அனைத்து சாதனங்களிலும் பயன்படும் வகையில், இரண்டு அல்லது மூன்று ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வந்துள்ள இந்த கீ போர்ட், அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றுகிறது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கீ போர்ட் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கிறது. விலை 50 டாலர்.