ad b

பெர்சனல் கம்ப்யூட்டர் அறிய வேண்டிய தகவல்கள்















இந்தியாவில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுவதையும், பயன்படுத்தப்படுவதையும் கண்காணித்து வரும் ஐ.டி.சி. (IDC) அமைப்பு, 
அண்மையில் சென்ற இரண்டாவது காலாண்டில், விற்பனையான பெர்சனல் கம்ப்யூட்டர்கள் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. மொத்த கம்ப்யூட்டர்களில் எச்.பி., டெல், லெனோவா (HP, Dell and Lenovo) ஆகிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளன. மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில், 62.3% விற்பனையை ஐந்து மாநிலங்கள் கொண்டிருந்தன. அவை தமிழ்நாடு (22.6%), மஹாராஷ்ட்ரா (15.8%), டில்லி (9.1%) கர்நாடகா (8.5%) மற்றும் ஆந்திர மாநிலம் (6.45). குறிப்பிட்ட மூன்று மாதங்களில் 25 லட்சத்து 50 ஆயிரம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் நுகர்வோர்க்கான கம்ப்யூட்டர் விற்பனை மிகவும் அதிகமாக இருந்தது. இவை இரண்டும் 41.8% பங்குடன் முன்னணியில் உள்ளன.