ad b

வேர்டில் குறிப்பிட்ட பக்கம் உடனே செல்வது எப்படி?


















என் சொல் எப்போதும் சரியே: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு 
ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் எழுத்துப் பிழையை வேர்ட் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், அந்த சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் "Ignore All" என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அதன் பின்னர், அந்த டாகுமெண்ட்டில், அந்த சொல் நீங்கள் டைப் செய்தபடியே ஏற்றுக் கொள்ளப்படும். இந்த சொல்லை Custom Dictionaryல் சேர்த்துவிட்டால், எந்த டாகுமெண்ட்டில் அந்த சொல் வந்தாலும், அது பிழை எனக் காட்டப்பட மாட்டாது. ஆனால், அதே டாகுமெண்ட் மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப் படுகையில், அந்த சொல் பிழை உள்ளதாகக் காட்டப்படும். இது டாகுமெண்ட்டைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தினை உங்களிடம் ஏற்படுத்தும். எனவே, எந்த கம்ப்யூட்டரில் டாகுமெண்ட் திறக்கப்பட்டாலும், பிழையற்ற சொல்லாக உங்களின் சொல் காட்டப்பட வழி ஒன்று கண்டறியப்பட வேண்டும். இதற்கு இரு வழிகள் உள்ளன.

1. நீங்கள் இவ்வகையில் குறிப்பிட விரும்பும் சொல் அல்லது சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். 


2. ரிப்பனில், Display டேப்பினைப் பெற்றுக் காட்டவும். 


3. இங்கு Language dialog box தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Proofing குருப்பில், Set Language டூலினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், Language குரூப்பில், Language டூல் தேர்ந்தெடுக்கவும். இதில் Set Proofing Language என்பதில் கிளிக் செய்திடவும்.


4. இங்கு Do Not Check Spelling or Grammar என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும்.


இரண்டாவது வழியினை இங்கு பார்க்கலாம். முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். 


வேர்ட் 2010ல், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து, ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து சென்று, Exceptions என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு Hide Spelling Errors in this Document Only என்ற செக் பாக்ஸ் டிக் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


இந்த வழி எப்படி செயல்படுகிறது? என்ற கேள்வி எழலாம். இதன்படி அமைக்கப்படும் செட்டிங்ஸ் மாற்றங்கள், டாகுமெண்ட் உடன் தொடர்ந்து செல்லும். இதனால், குறிப்பிட்ட சொல் பிழையானது என்னும் குறை காட்டப்பட மாட்டாது. 


இன்னொரு வழியாக, உங்கள் custom dictionary file ஐ மற்றவர்களுக்கும் அனுப்பி, அவர்கள் கம்ப்யூட்டரில் வேர்ட் டைரக்டரியில் பதிவு செய்து பயன்படுத்தச் சொல்லலாம். அப்போது, இந்த சொற்கள் பிழையற்றதாகவே காட்டப்படும். அலுவலகம் ஒன்றில் குழுவாகப் பணியாற்றுபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.


குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல: மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது. Edit மெனு சென்று, Go To செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், Go To என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.