ad b

கணினியை பிரதிபலிக்கும் ஸ்கிரீன் டிப்ஸ்

ஒரு ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்கையில், அந்த ஐகான் பற்றியோ அல்லது அது பிரதிபலிக்கும் புரோகிராம் குறித்தோ காட்டப் படும், ஒவ்வொரு சிறிய டெக்ஸ்ட் அடங்கிய பெட்டியும், அந்த பெட்டியில் என்ன வகையான செய்தியாக இருந்தாலும், அதன் பெயர் ஸ்கிரீன் டிப் (screen tip) என்பதாகும். 



யாராவது ஒருவர், இது என்னுடைய ஐயப்பாடு தான், ஏன் அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்க வேண்டும் என எண்ணி, இவை வேறுபடும் சிறிய தன்மையின் அடிப்படையில் புதிய பெயர் அளித்திருக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு பார்க்கலாம்.
பலூன் டிப்: நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள ஐகான் ஒன்றின் மீது கர்சரைக் கொண்டு செல்கையில், மேலாக எழும்பி வரும் பலூன்அல்லது நீர்க்குமிழி தோற்றத்தில் எழும் டிப்ஸ் அடங்கிய கட்டத்தினை இவ்வாறு கூறுகிறோம். இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, சிஸ்டத்தில் இந்த ஐகான் சார்பாக என்ன இயங்கிக் கொண்டுள்ளது என்று காட்டுகிறது. நெட்வொர்க் இணைப்பு நிலை, வால்யூம் அளவு போன்றவை இவை. இரண்டாவது வகை, அந்த ஐகான் சார்பாக இயங்கும் புரோகிராம் என்ன என்று காட்டும்.
பாப் அப் (விளக்க உரை) டிப்: நம் மவுஸ் ஐகான் மீது செல்கையில் கிடைக்கும் சிறிய அளவிலான விளக்க உரையாகும். எ.கா: வேர்ட் டாகுமெண்ட், பாடல் கோப்பு போன்றவை. இவை டெஸ்க்டாப்பில் மட்டுமின்றி, மேலும் பல இடங்களிலும் கிடைக்கும். டாகுமெண்ட், படங்கள் என எங்கெல்லாம் விளக்கம் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் கிடைக்கும்.
டூல் டிப்ஸ்: ஸ்டார்ட் மெனுவின் வலது மூலையில் கிடைக்கும் டிப்ஸ் இவை. எந்த புரோகிராம், போல்டர், புரோகிராம் பெயர் ஆகியவற்றைத் தரும் டிப்ஸினை இந்த பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்த் டிப்ஸ் மூலம், ஐகான் பிரதிபலிக்கும் இந்த டிப்ஸ்கள் எனக்குத் தேவை இல்லை என யாராவது விரும்பினால், இவற்றை வராமல் செய்துவிடலாம். ஆனால், ஒவ்வொரு வகை டிப்ஸ் நிறுத்த, ஒரு செட்டிங்ஸ் செய்திட வேண்டும். எனவே அவை இங்கு தரப்படவில்லை.