ad b

நோட்டிபிகேஷன் ஏரியாவில் ஐகான்களை நீக்க வேண்டுமா

விண்டோஸ் 7 சிஸ்டம் தன்னுடைய நோட்டிபிகேஷன் ஏரியாவினை எப்படி அமைத்துள்ளது என்பது குறித்த தெளிவு இல்லாததனால், இந்த ஐயங்கள் ஏற்படுகின்றன. மைக்ரோசாப்ட் இதற்கு நோட்டிபிகேஷன் ஏரியா (notification area) எனப் பெயர் கொடுத்ததன் விளைவு என்று கூடச் சொல்லலாம்.

இந்த நோட்டிபிகேஷன் ஏரியாவில், புரோகிராம் ஒன்று இயங்கினால் மட்டுமே இதில் காட்டப்படும். எனவே, இந்த ஏரியாவில், ஐகான் ஒன்றினை நீக்க வேண்டும் என விரும்பினால், அந்த புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்தினாலே போதும். கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போதே, சில புரோகிராம்கள் பின்னணியில் இயங்கத் தொடங்கும். எ.கா. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள். இவற்றின் ஐகான்கள் தாமாகவே, நோட்டிபிகேஷன் ஏரியாவில் காட்டப்படும். இவையும் காட்டப்படாதவாறு அமைக் கப்பட வேண்டும் என்றால், அவற்றை இன்ஸ்டால் செய்திடுகையிலேயே, அவ்வாறு செட் செய்யப்பட வேண்டும். இது போல நமக்கு வேண்டாத, ஆனால், தானாக ஸ்டார்ட் அப் வகையில் இயங்கும் புரோகிராம்களை “noisy” software என அழைப்பார்கள். ஏனென்றால், இவை அடிக்கடி நமக்கு பாப் அப் தகவல்களைக் காட்டிக் கொண்டே இருக்கும்.
மறைந்திருக்கும் ஐகான்கள் காட்டப்பட, நோட்டிபிகேஷன் ஏரியாவில் காட்டப்படும் சிறிய மேல் நோக்கிய அம்புக் குறியின் மீது கிளிக் செய்திட வேண்டும். அப்போது மறைவாக இருக்கும் ஐகான்கள் காட்டப்பட்டு, அவற்றின் கீழாக Customize என்ற லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் விண்டோவில், நீங்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்பாடுகளுக்கான ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் தேவையானதை தேர்ந்தெடுத்து இயக்கலாம். இங்கும் கூட, ஐகான்கள் மறைக்கப்படுவதனை மட்டுமே மேற்கொள்ள முடியும். எனவே, ஏதேனும் ஐகான் மறைக்கப் பட்டுக் கூட இருக்கக் கூடாது என்றால், அந்த புரோகிராமில் இருந்து வெளியேறுவதுதான் ஒரே வழி. நாம் நீக்க விரும்பும் ஐகானில் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் “exit” என்ற பிரிவில் கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் இயக்கம் நிற்கும். ஐகானும் மறைந்திடும்.
சில புரோகிராம்களுக்கான ஐகானில் ரைட் கிளிக் செய்தால், அதன் இயக்கத்தை நிறுத்துவதற்கான ஆப்ஷன் கிடைக்காது. அப்படிப்பட்ட புரோகிராம்களுக்கு, “Ctrl,” “Alt,” and “Delete” கிளிக் செய்து, டாஸ்க் மானேஜர் விண்டோவினை இயக்கி, அதில் “Processes” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து, புரோகிராமின் பெயர் இருக்குமிடத்தைக் காண வேண்டும். அதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், இதன் கீழாகச் சென்று, “End Process” என்ற பட்டனில் கிளிக் செய்தால், புரோகிராம் இயங்குவது நிறுத்தப்படும்.
இந்த புரோகிராம், அடுத்த முறை கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திடுகையில், தானாகவே இயங்கத் தொடங்கும். இதனையும் நிறுத்த வேண்டும் என்றால், ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, கிடைக்கும் தேடல் கட்டத்தில் “msconfig” என டைப் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், “Startup” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இது “Services” மற்றும் “Tools” என்ற டேப்களுக்கு இடையே காணப்பரும். இங்கு காட்டப்படும் புரோகிராம்களின் பட்டியலில் ஸ்குரோல் செய்து, நீங்கள் எந்த புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு தரப்பட்டிருக்கும் செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும். பின்னர் “Apply” என்ற பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவும். குறிப்பிட்ட புரோகிராம் இயங்காது. ஐகானும் நோட்டிபிகேஷன் ஏரியாவில் இருக்காது.