ad b

எக்ஸெல்லில் ஒரே டேட்டாவில் பல செல்களை அமைக்க

ஒரே டேட்டா பல செல்களில்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன?
எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல் + என்டர் கீகளை அழுத்துங்கள். அந்த எண், தேர்வு செய்யப்பட்ட எல்லா செல்லுகளிலும் வந்து விடும்


.வரைபட கோடுகள்: எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், அமைக்கப்படும் டேட்டாவிலிருந்து நீங்கள் வரைபடம் ஒன்றை உருவாக்கும்போது, எக்ஸெல் சார்ட் ஒன்று எப்படி அமைய வேண்டும் எனப் பல விஷயங்களைத் தானே கையாள்கிறது. இவற்றில் ஒன்று இதில் அமைக்கப்படும் வரையறைக் கோடுகள் (Gridlines). இந்த வரையறைக் கோடுகள், நாம் வரைபடத்தில் பயன்படுத்தும் கிராபிக் பொருட்களின் உயரம் அல்லது அகலத்தை எளிதாக வரையறை செய்திட உதவுகின்றன. எந்த கோடுகள் காட்டப்பட வேண்டும், எவை காட்டப்படத் தேவையில்லை என்பதனை அமைக்க எக்ஸெல் நமக்கு உதவுகிறது. கீழே தரப்படும் செயல்முறைகளின் மூலம் இவற்றை நாம் அமைக்கலாம்.
1. முதலில் எந்த சார்ட்டில் இந்த வரையறைகளைக் கையாள வேண்டுமோ, அதில் கிளிக் செய்து அதனைத் தேர்ந்தெடுக்கவும். selection handles தேர்ந்தெடுப்பதற்கான வரைபடத்திற்கு வெளியே காட்டப்படுவதனைக் காணலாம்.
2.ரிப்பனில் Layout என்ற டேப் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும். சார்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே இவை காட்டப்படும்
3. அடுத்து Axes என்ற குரூப்பில், Gridlines tool என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல ஆப்ஷன்களுடன், கீழ்விரி மெனு ஒன்று காட்டப்படும்.
4. இந்த மெனுவில் இருந்து, நீங்கள் விரும்பும் வகையில், Primary Horizontal Gridlines அல்லது Primary Vertical Gridlines என தேவையானதைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கலாம்.
சார்ட்டுக்கான எழுத்து வகை தேர்வு: எக்ஸெல் தொகுப்பில், சார்ட் ஒன்றை உருவாக்குகையில், அதில் பல வகையானவற்றை இணைக்கலாம். தலைப்பு, டேட்டா லேபிள் போன்றவற்றை அமைக்கலாம். இவற்றிற்கான எழுத்து வகையினை உங்கள் விருப்பம் போல அமைத்திட எக்ஸெல் உங்களுக்கு அனுமதியும் வசதியும் தருகிறது. இந்த வகை சொற்களுக்கு மட்டும் என தனி எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
1. எழுத்து வகையினைத் தனியே அமைக்க விரும்பும் சார்ட்டினை இயக்கவும். அதன் மீது கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
2. எந்த டெக்ஸ்ட்களுக்கு எழுத்து வகையினை மாற்ற எண்ணுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக்காட்டாக, சார்ட்டிற்கான தலைப்பின் எழுத்தினை மாற்ற விரும்பினால், அதனைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், எக்ஸெல், இவற்றைச் சுற்றி சிறிய கருப்பு சதுரங்களை அமைக்கிறது. இது நீங்கள் இவற்றினைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதனைக் காட்டுவதற்காக.
3. அடுத்து ரிப்பனில் ஹோம் டேப்பினைக் காட்டவும்.

இங்கு Font group இல் கிடைக்கும் டூல்களை இயக்கி, எழுத்து வகையின் தோற்றத்தினை மாற்றவும்.