ad b

தொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைப்பது எப்படி?

வேர்ட் புரோகிராம், நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பலவகையான டாகுமெண்ட்களைத் தயாரித்து, கூடுதல் வசதிகளுடன் அவற்றை வழங்க அனைத்து வழிகளையும் தருகிறது. பல வேளைகளில், டாகுமெண்ட் ஒன்றை யார் தயாரித்தார்கள் அல்லது கடைசியாக யார் அதனைத் திருத்தினார்கள் என்று நாம் அறிய விரும்புவோம். 






கடைசியாகத் திருத்தப்பட்டு பல மாதங்கள் ஆகி இருந்தால், அதனைக் கண்டறிவது சற்று சிரமமான வேலையாக இருக்கும்.
டாகுமெண்ட் ப்ராப்பர்ட்டீஸ் (document properties) என்ற பகுதியில், வேர்ட், டாகுமெண்ட் தயாரித்தவர் குறித்த பல தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்கிறது. இதில் ஒரு சிறப்பான தகவல், டாகுமெண்ட் தயாரித்தவரின் தொலைபேசி எண். இது இருந்தால், நாம் டாகு மெண்ட்டினை இறுதியாக திருத்தியவர் குறித்து எளிதாக அறிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்ணை அமைக்கக் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
1. பைல் மெனுவில் இருந்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Custom டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. டயலாக் பாக்ஸின் மேலாக (பெயர் சார்பாக) இருப்பதில் Telephone Number என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு Value பாக்ஸில், டாகுமெண்ட் அமைத்தவரின் போன் எண்ணைப் பதியவும்.
5. அடுத்து Add என்பதில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.