ad b

வேர்டில் காப்புரிமை அடையாளம் அமைக்க

காப்புரிமை அடையாளம் அமைக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் பல சிறப்பு குறியீடுகளை நாம் அவ்வப்போது அமைக்க வேண்டியதிருக்கும். அவற்றில் அடிக்கடி நாம் பயன் படுத்துவது, எழுத்துரிமையைக் குறிக்கும் காப்புரிமை குறியீடு ஆகும். இதனை ஆங்கில எழுத்து சி (C) அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி சிறிய வட்டம் அமைக்கப்பட்டிருக்கும். 



உங்களுடைய வேர்ட் தொகுப்பில் ஆட்டோ கரெக்ட் வசதி தரப்பட்டு, அதன் இயக்கம் நிறுத்தப்படாமல் இருந்தால், இதனை அமைப்பது எளிதாகும். அவ்வாறு இருந்தால், எழுத்து “c” யினை இரு அடைப்புக் குறிக்குள் அமைத்தால், அது தானாகவே காப்புரிமைக் குறியீடாக (C) மாற்றப்பட்டு அமைக்கப்படும்.
ஆனால், உங்கள் வேர்ட் புரோகிராமில் ஆட்டோ கரெக்ட் இயக்கம் நிறுத்தப்படிருந்தால், இந்த மாற்றம் ஏற்படாது. இதற்கு என்ன செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம்.
கீ போர்டில் Ctrl+Alt+C ஆகிய கீகளை அழுத்தவும். மவுஸ் பயன்படுத்த எண்ணினால்,
1. Insert மெனுவிலிருந்து Symbol என்பதனைத் தேர்ந்தெடுத்தால், நமக்கு Symbol டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 
2. இதில் Special Characters என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 
3. இங்கு கிடைக்கும் குறியீடுகளில் Copyright என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

ஹைலைட்டிங் கலர்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
டெக்ஸ்ட்டுடன் விதம் விதமாய் கோடுகள்: வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம். இன்னொரு சிறப்பு  இவற்றை அமைத்திட பல சுருக்கு வழிகள் இருப்பதுதான்.

இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (-) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று சமன் (=) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (#) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது? கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto corrections என்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.