ad b

ப்ராட்ஸெட் கம்ப்யூட்டர் என்றால் என்ன

Frotzed: தற்காலிகமாக, ஏதோ ஒரு வகை ஹார்ட்வேர் பிரச்னையால், இயங்க முடியாமல் இருக்கும் கம்ப்யூட்டரை, ப்ராட்ஸெட் (Frotzed) கம்ப்யூட்டர் என அழைக்கிறார்கள். இதனைச் சரி செய்வதற்கு, புதிய ஹார்ட்வேர் பகுதிகள் எதுவும் தேவைப்படாது. வேறு சிறிய அளவில் சரி செய்தால் இயங்கிவிடும்.


Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்ட், பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.
Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.
USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும். எனவே ட்ரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.

பேண்ட்வித் (Bandwidth): இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.