ad b

ரைட் கிளிக் கீ என்பது என்ன?

ரைட் கிளிக் கீ என்பது என்ன? இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. ஆனால் விடை காண இவர்கள் முயலுவதில்லை. ரைட் சைடில் இருக்கும் விண்டோ கீயைத்தான் இப்படிக் கூறுகிறார்கள் என்றும் சிலர் எண்ணுகின்றனர். 



இது எந்த கீயைக் குறிக்கிறது என்பதனையும், அதன் செயல்பாட்டினையும் காணலாம்.
விண்டோ கீ வேறு, ரைட் கிளிக் வேறு. ரைட் கிளிக் கீ என்பது வலது பக்கம்
விண்டோ கீ மற்றும் கண்ட்ரோல் கீ ஆகியவற்றின் இடையே அமைந்திருக்கும். இந்த கீக்கென தனியே பெயர் எதுவும் இல்லை. பின் ஏன் அதனை ரைட் கிளிக் கீ என அழைக்கிறோம். இதனை அழுத்தினால் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமிற் கான ரைட் மவுஸ் கீயை அழுத்தினால் என்ன மெனு கிடைக்குமோ அது கிடைக்கும். அதனால் தான் அதனை ரைட் கிளிக் கீ என்று அழைக்கிறோம். மெனு ஒன்று கிடைப்பதால் சிலர் இதனை மெனு கீ எனவும் அழைக் கிறார்கள். எனினும் ரைட் கிளிக் கீ என்பதே சரி. இன்னொரு தகவல் இங்கு தந்தால் நன்றாக இருக்கும். விண்டோ கீயை ஷிப்ட் கீயுடனோ அல்லது கண்ட்ரோல் கீயுடனோ அழுத்தினால் ஒன்றும் நடக்காது.