ad b

வேர்ட்டில் தேவையற்ற கோடுகளை தவிர்ப்பது எப்படி?

தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய பார்டர் லைனாகும்.



தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில் இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள None பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும் என்றால் Tools மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் Auto Correct Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் என்ற AutoFormat As You Type டேபிற்குச் செல்லுங்கள். Apply as you type என்ற இடத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines என்ற இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.
முற்றுப் புள்ளிக்குப் பின்: இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் தொடங்கச் சொல்வார்கள். (இந்த நாட்களில் இளைஞர்கள் அது போன்ற வரைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை.) திட்ட ஆய்வு அறிக்கைகளை தட்டச்சு செய்கையில் இதனைக் கட்டாயமாகப் பின்பற்றச் சொல்வார்கள். சரி, இதனைத் தானாக அமையும்படி எப்படி வேர்ட் புரோகிராமில் அமைப்பது எனப் பார்க்கலாம். வேர்ட் தானாக இதனை அமைத்துக் கொள்வதில்லை; நாம் தான் அமைக்க வேண்டும்.
1. Tools மெனுவிலிருந்து Options பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த பாக்ஸில், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 
3. இனி Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Spaces Required Between Sentences என்ற கீழ்விரி பட்டியலைத் திறக்கவும். இங்கு எத்தனை ஸ்பேஸ் வேண்டும் என்பதற்கான அளவுகள் 1, 2 எனக் கிடைக்கும்.
5. எத்தனை ஸ்பேஸ் எனத் தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து Grammar Settingsடயலாக் பாக்ஸை மூடவும். அதன் பின்னர், ஆப்ஷன் டயலாக் பாக்ஸையும் அதே போல் மூடவும்.
இனி, இலக்கண தவறுகளைச் சோதனை செய்கையில், வாக்கியங்களுக்கு இடையில், இரண்டு இடைவெளி இல்லாமல் அமையும் இடங்களில், அந்த பிழையைச் சுட்டிக் காட்டும். இதில் ரைட் கிளிக் செய்து, தானாக பிழையைச் சரி செய்திட ஆப்ஷன் கொடுத்தால், இரண்டு ஸ்பேஸ் தரப்படும்.