ad b

வேர்டில் இணைத்த செல்களைப் பிரிப்பது எப்படி?

இணைத்த செல்களைப் பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம்? அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.






1. ஏற்கனவே இணைக்கப்பட்ட செல்லில் ரைட்கிளிக் செய்திடவும்.
2. கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Split Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Split Cells என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் கிடைக்கும், கண்ட்ரோல்களைப் பயன்படுத்தி, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை இந்த இணைக்கப்பட்ட செல்லில் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடவும்.
2. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட செல்களைப் பார்த்தால், டேபிளின் மற்ற செல்களுடன் இணைவாக இவை இருக்க மாட்டா. இவற்றை நாமே அட்ஜஸ்ட் செய்து சரியாக அமைக்கலாம்.
இல்லை எனில், கீழே குறிக்கப்பட்டுள்ள இன்னொரு வழியையும் செயல்படுத்தலாம்.
1. ரிப்பனில் Insert என்னும் டேப்பினைக் கண்டறியவும். (இந்த டேப்,வேர்ட் டேபிளில், ஏதேனும் ஓர் இடத்தில், இடைச் செருகல் குறி இருந்தால் தான் தெரியும்.)
2. Draw Borders குரூப்பில் Draw Table டூலில் கிளிக் செய்திடவும். இந்த டூல், ஒரு பென்சில் போலத் தோற்றமளிக்கும். மவுஸ் கர்சர் பென்சில் போலத் தோற்றமளிக்கும்.
3.மவுஸ் கர்சரைப் பயன்படுத்தி, டேபிளில் செல் வரிகளை அமைக்கவும். மவுஸ் பட்டனை விடுகையில், செல் நாம் வரைந்த அளவில் காட்டப்படும்.
பைல்களைக் கண்டு திறக்க: பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து வேலை பார்க்கையில் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு டேப் டாஸ்க் பாரில் ஏற்படுத்தப்படும். அதில் சம்பந்தப்பட்ட அப்ளிகேஷனுக்குரிய ஐகானும் பைலின் பெயரும் இருக்கும். அதனைப் பார்த்து நாம் எந்த பைல் வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து திறக்கலாம். ஆனால் ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறக்கையில் அவை குரூப்பாகக் காட்டப்படும். பைலின் பெயர் தெரியாது. ஒவ்வொரு முறையும் இந்த குரூப் ஐகானில் கிளிக் செய்து மேலே எழும் பட்டியலில் பைலின் பெயரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம்.
இதற்கு ஒரு வழியாக ஆல்ட் + டேப் கீகளை அழுத்தலாம். வேர்ட் ஐகான்களோடு பைலின் பெயர் திரை நடுவில் தெரியும். அதனைக் கொண்டும் டாகுமெண்ட்டுகளுக்கிடையே ஊர்வலம் போகலாம். இவை எல்லாம் திறந்திருக்கும் பைல்களை உடனே காட்டாது. ஐகான்கள் அல்லது டாஸ்க்பாரின் கட்டங்கள் சென்று கிளிக் செய்திட வேண்டும். அதற்குப் பதிலாக கண்ட்ரோல் + எப்6 அழுத்தினால் ஒவ்வொரு டாகுமெண்ட்டாக நாம் திறந்து பணியாற்றிய நிலையில் உடனுடக்குடன் தோன்றும்.
மெனு பட்டன்களை இடம் மாற்ற: நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ல மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.
இதற்கு முதலில் கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.